மரணித்தவரின் வீட்டில் மூவருக்கு கொரோனா..!

 மரணித்தவரின் வீட்டில் மூவருக்கு கொரோனா..!

இக்பால் அலி

ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

0 Reviews

Related post