மரணித்த ஊடகவியலாளர்களுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் நினைவஞ்சலி

 மரணித்த ஊடகவியலாளர்களுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் நினைவஞ்சலி

(யூ.கே.காலித்தீன்)

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (28) அதன் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது முதல் அமர்வில் அண்மையில் மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவு பணிப்பாளர் றசீட் எம்.ஹபீல், பிராந்திய செய்தியாளர் எம்.சிவப்பிரகாசம் மற்றும் பன்னூலாசியரான ஊடக வித்தகர் எம்.எம்.எம்.நூறுல் ஹக் ஆகியோருக்கான பிரார்த்தனையும் நினைவுரைகளும் இடம்பெற்றன.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியாளருமான எம். ஏ.பகுர்தீன் மற்றும் ஊடகவியலாளர் அஸ்லம் எஸ்.மௌலானா ஆகியோர் இவர்கள் தொடர்பான நினைவுரைகளை நிகழ்த்தினர்.

இரண்டாம் அமர்வில் 2021/ 2022 நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பி. முஹாஜிரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பின்வருவோர் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளராக எம்.சஹாப்தீன்,
தலைவராக எம்.ஏ.பகுர்தீன்,
செயலாளராக எம்.எஸ்.எம்.ஹனீபா,
பொருளாளராக எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்
அமைப்பாளராக யூ.எல்.எம்.றியாஸ்,
பிரதித் தலைவராக ஏ.எல்.ஏ.நிப்றாஸ்
உப தலைவராக வி.சுகிர்தகுமார்,
உப செயலாளராக யூ.கே.காலித்தீன்,
கணக்காய்வாளராக ஏ.எல்.றியாஸ்

முகாமைத்துவ சபை உறுப்பினர்களாக
எம்.எப்.நவாஸ்
எம்.ஐ.எம்.வலீத்
எல்.கஜன்
என்.எம்.எம்.புவாட்
கே.எல்.அமீர்
பி.முஹாஜிரின்
ஏ.எல்.எம்.சியாத்
ஐ.உசைதீன்
அஸ்லம் எஸ்.மௌலானா
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

0 Reviews

Related post