மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலம் பதிவு

 மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விசேட பொலிஸ் குழு இன்று (24) காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அவர் வௌிட்ட கருத்து தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News 1st இன் Newsline விசேட தொகுப்பில் கலந்துகொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை அம்பலப்படுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, விசேட பொலிஸ் குழு மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் நாவலப்பிட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

0 Reviews

Related post