முழுநாட்டிலும் இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா?

 முழுநாட்டிலும் இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா?

புத்தாண்டுக்குப் பின்னர், கொரோனா தொற்றின் வேகம் வெகுவாக அதிகரித்துள்ளது. மரணிப்போரின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகரித்துள்ளது.

சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. கிராம சேகவர் பிரிவுகள் சிலவற்றில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல், குளியாப்பட்டிய பகுதியிலும் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பாடசாலைகள் சில மூடப்பட்டுள்ளன. நாளை சனிக்கிழமையும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் அதற்கடுத்த நாள் திங்கட்கிழமையும் விடுமுறை நாள்கள் என்பதனால், வெளிப் பிரதேசங்களுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழுநாட்டிலும் இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்ற தகவல்களும் பரவியிருக்கின்றன.

எனினும், கொரோனா வைரஸின் தாக்கம், கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் முழுமையாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (23) மாலை 3 மணிக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அதற்கான ஊடகச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதில், பல முக்கியஸ்ர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. @D/M

0 Reviews

Related post