மு.கா.வுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் சிராஸ்..!

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் ஏன் பாராளுமன்ற தேர்தல் கேட்கவில்லை என்பது தொடர்பாகவும் இத்தேர்தலில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது நெருங்கிய ஆதரவாளர்களை கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு தனது இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடியதுடன் தனது நிலைப்பாடு தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.