ரஹ்மத் மன்சூரினால் சாய்ந்தமருது ஹிதாயா, சம்மாந்துறை பத்ஹ் பள்ளிவாசல்களுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் பெட் கையளிப்பு..!

 ரஹ்மத் மன்சூரினால் சாய்ந்தமருது ஹிதாயா, சம்மாந்துறை பத்ஹ் பள்ளிவாசல்களுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் பெட் கையளிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹிதாயா மற்றும் சம்மாந்துறை மஸ்ஜிதுல் பத்ஹ் பள்ளிவாசல்களுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், நேற்று குறித்த பள்ளிவாசல்களுக்கு நேரடியாக விஜயம் செய்து, பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடம் கையளித்தார்.

இதன்போது ரஹ்மத் மன்சூர் அவர்களின் சேவைகளுக்காக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

வை.எம்.எம்.ஏ. பேரவையின் அனுசரனையில் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற ரஹ்மத் சமூக சேவை அமைப்பு, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post