வெற்றியில் பங்காளிகளாக மாறுங்கள்; றிஸ்லி முஸ்தபா அழைப்பு!

 வெற்றியில் பங்காளிகளாக மாறுங்கள்; றிஸ்லி முஸ்தபா அழைப்பு!

-எம்.என்.எம்.அப்ராஸ்-

மக்களுக்கு துரநோக்குள்ள சேவையை செய்யவே தேர்தலில் குதித்தேன்  நான் உங்களுக்காக என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் .மேலும் இந்த தேர்தலானது எமது சமுகத்திற்கு முக்கியமானதொன்றாகும்.

இதன் வெற்றியில் நாமும் பங்காளராய் வர வேண்டும் கடந்த காலத்தில் யுத்ததை ஒழித்தது மாத்திரம் அல்லாமல் நாட்டை அபிவிருத்தி பாதையில் ஈட்டுச்சென்றது மகிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கத்திலாகும் தேர்தல் வெற்றியின் பின் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்வது உறுதியாகிவிட்டது. என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் திகாமடுள்ள மாவட்டடத்தில்
இலக்கம் 06 இல் போட்டியிடும் வேட்ப்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கல்முனையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மேலும் அங்கு உரையாற்றுகையில்

எனது வெற்றியை இவ் திகாமட்டுள்ள மாவட்டத்தில் உறுதிப்படுத்த பலர் என்னுடன் இணைந்து செயல்பட்டு பலப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மாவட்டத்தில் 4 ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது .

இதில் நானும் இறைவனின் துணையுடன் வெற்றி பெறுவேன் நீங்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியிலும் எனது வெற்றியிலும் ஒட்டு மொத்தமாக பங்காளிகளாக மாறுங்கள் என்றார் .இவர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்களின் புதல்வரேன்பது குறிப்பிடத்தக்கது.இதில் நானும் இறைவனின் துணையுடன் வெற்றி பெறுவேன் நீங்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியிலும் எனது வெற்றியிலும் ஒட்டு மொத்தமாக பங்காளிகளாக மாறுங்கள் என்றார் .இவர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்களின் புதல்வரேன்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post