189 புள்ளி பெற்ற மாணவி எஹியாகான் பௌண்டேஷனால் கௌரவிப்பு..!

 189 புள்ளி பெற்ற மாணவி எஹியாகான் பௌண்டேஷனால் கௌரவிப்பு..!

இம்முறை 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று, சித்தியடைந்த சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவி பைஸால் பாத்திமா அராத், எஹியாகான் பௌண்டேஷனால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் மேற்படி அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ஏ.சி.எஹியாகான் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அவரது சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஹியாகான் பௌண்டேஷன் செயலாளர் எம்.எம்.றியால், பிரதித் தலைவர்களான எம்.சியாம், எம்.சீனன் காக்கா மற்றும் ஊடக செயலாளர் நஸ்மி அஹ்மத், ஆசிரியர் முஹம்மத் பைசால் உட்பட மற்றும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த மாணவி பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி அமைப்பு நீண்ட காலமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உறுதுனையாக இருந்து வருவதுடன் அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post