8,400 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது!

 8,400 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது!

இம்மாதம் (ஜூன்) 06 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 7.3 கிலோ கிராமிற்கு அதிகமான ஹெரோயின், 284 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 835 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 3 கை துப்பாக்கிகள், 23 ரிபீடேர்ஸ் மற்றும் 21 குறுந்தூர துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 379,700 லீட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானம் உட்பட 7,150 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 6,750 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 12,000 க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0 Reviews

Related post