(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த இரு தினங்களாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன்போது முதல் […]Read More
சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனம் – FIFA இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட சர்வதேச நடுவர்களின் (FIFA International Referees 2021) பெயர் பட்டியலினை வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஆறு பேர் சர்வதேச நடுவர்களாக தெரிவாகியுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு (06) சர்வதேச நடுவர்களில் கல்முனையைச் சேர்ந்த ஜப்ரான் ஆதம்பாவா ஒரே ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
PCR Negative: சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸாவை விடுவிப்பதில் இழுத்தடிப்பு; பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்றில்
(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆவணத்தை மையப்படுத்தி, எதிர்வரும் 11-01-2021 திகதி திங்கட்கிழமை குறித்த வழக்கை ஆதரிப்புக்கு எடுக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றம் பணித்துள்ளது. இவரது ஜனாஸா தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு […]Read More
(ஏ.ஜஸீஹரன்) யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும், முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர்.இதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் மேயராகத் தெரிவாகியுள்ளார். மாநகர சபையின் மேயர் தெரிவுக்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை […]Read More
புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைத்தரட்டும்; அலிஸாஹிர்
(அஸ்லம் எஸ்.மௌலானா) கொவிட் -19 தொற்று நோயினால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என நம்புவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; கொவிட்-19 இலங்கையில் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதேவேளை அடக்கம் செய்வது […]Read More
சர்வாதிகாரத்திற்கு அடிபணியும்படி அல்-குர்ஆன் கூறுகிறதா? எமக்காக குரல்கொடுத்த தமிழ் எம்.பிக்களை ஏன் விமர்சிகின்றனர்?
பாலஸ்தீனர்களின் புனித போராட்டத்தை பணத்திற்கும், பதவிக்குமாக ஒருசில பாலஸ்தீனர்களே யூதர்களிடம் காட்டிக்கொடுக்கின்றார்கள். ஆனால் இங்கே புனிதமும் இல்லை, போராட்டமும் இல்லை. இவ்வாறான நிலையில் தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல. நாட்டுச் சட்டத்திற்கு அடிபனியுமாறு அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சட்டமும், இஸ்லாமிய சட்டமும் முரண்பாடான நிலையில் இருந்தால் நாங்கள் எதனை பின்பற்றுவது ? இதற்கு உலமாக்கள் பதில் வழங்குவதுதான் பொருத்தமானது. ஆனால் எம்மிடம் அவ்வாறான உலமாக்கள் இல்லை. எவ்வாறான நாட்டின் சட்ட திட்டத்திற்கு […]Read More
இக்பால் அலி ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.Read More
கொவிட் தடுப்பு, தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான தெளிவு; முறையான அதிகாரி என்பவர் யார்?
-சஞ்சித்- உலகை ஆட்கொண்டிருக்கின்ற கொரோனா எனும் கொடிய நோயின் இரண்டாவது அலை தற்போது இலங்கையை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் மக்களிடையே காணப்படுகின்ற சந்தேகங்கக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த ஆக்கம் எழுதப்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை 1800களில் ஆம் ஆண்டு ஸ்பானிஸ் புளு தொற்று நோய் தொடங்கிய காலகட்டங்களில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அது காலத்திற்குக் காலம் வர்த்தமானிப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்டு வந்துள்ளது. அதனடிப்படையில் 1925/08/28ஆம் திகதிய 7481ஆம் […]Read More
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார். எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நால்வரும் கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருமே இவ்வாறு புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி சாய்ந்தமருதில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் […]Read More







