(ஏ.ஜஸீஹரன்) யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும், முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர்.இதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் மேயராகத் தெரிவாகியுள்ளார். மாநகர சபையின் மேயர் தெரிவுக்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை […]Read More
யாழ். நிருபர் பிரதீபன் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு புகுந்து வயோதிபப் பெண்களை தாக்கி நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருடைய மோப்ப நாயின் உதவியுடனே குறித்த கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சித்தங்கேணிப் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (26) அதிகாலை 1 மணி அளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்கிருந்து வயோதிப […]Read More
இம்மாதம் (ஜூன்) 06 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 7.3 கிலோ கிராமிற்கு அதிகமான ஹெரோயின், 284 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 835 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் என்பன […]Read More







