மருதமுனை காரியப்பர் வீதி புனரமைப்பில் இடம்பெற்றுள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்குமாறு முதல்வர் ஏ.எம்.றகீப்
(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை காரியப்பர் வீதியின் புனரமைப்பு வேலைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது இப்பிரச்சினை குறித்து பிரஸ்தாபித்து, கலந்துரையாடியபோதே முதல்வர் இதனை வலியுறுத்தினார். மருதமுனை காரியப்பர் வீதியை, காபர்ட் வீதியாக புனரமைப்பு செய்தபோது, அவ்வீதியின் ஒரு பகுதி சரியாக செப்பனிடப்படாமலும் வடிகான் குழிகள் மூடப்படாமலும் […]Read More