FIFA சர்வதேச நடுவராக கல்முனை ஜப்ரான் ஆதம்பாவா தெரிவு..!

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனம் – FIFA இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட சர்வதேச நடுவர்களின் (FIFA International Referees 2021) பெயர் பட்டியலினை வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஆறு பேர் சர்வதேச நடுவர்களாக தெரிவாகியுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு (06) சர்வதேச நடுவர்களில் கல்முனையைச் சேர்ந்த ஜப்ரான் ஆதம்பாவா ஒரே ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.